கொக்கரக்கோ..
மஞ்சக் காட்டுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சின்ராசிடம் வந்தாள் அம்மணி.
''ஏ அம்மணி அட மேக்காட்டுல கள பறிக்கச்சொன்னேனே பறிச்சுட்டியா?
''இன்னும் இல்லீங் மாமா.. மனசுக்குள்ள ஒண்ணு அரிச்சுக்கிட்டே இருந்துச்சு அதான் என்ன ஏதுன்னு கேட்டுப்போட்டு போலாம்ன்னு வந்தேனுங்க மாமா''
''என்ன அம்மணி கேளு''
''அது ஒண்ணும் இல்லீங் மாமா..மாலை போட்டுகிட்டு ''ஐயப்பா ஐயப்பான்னு'' சபரி மலைக்கு போனவங்கெல்லாம்
''ஐயோ அப்பா'' ''ஐய்யோ அப்பா''ன்னு ஓட்டம் புடிக்கறாங்களாம்.என்னங் மாமா ஆச்சு''
''அட கெரவத்தே அதக்கேக்குறயா''
''ஆமா மாமான்னா மொட்டயா சொல்லிப்போட்டு வந்துட்டீங்க..மண்டைக்குள்ள ஒரே கொடச்சலு என்ன ஏதுன்னுதான் கொஞ்சம் சொல்லுங்களேன்''
''அட புள்ள முல்லப் பெரியாரு அணைப் பிரச்சனையே இன்னும் சூடு அடங்கல..மலயாளியும் தமிழனும் கட்டி பொரளாத கொறைதான்..ஏற்கனவே கன்னடத்துக்காரனுக்கும் சரி மலையாளிக்கும் சரி தமிழன்னு சொன்னாவே எளக்காரம்..எப்படா வாய்ப்பு கெடைக்கும் வாயில குத்தலாமுன்னு இருக்கானுங்க..சூட்டோட சூடா நம்மாளுக மாலைய மாட்டிக்கிட்டு அவுங்கூருக்கு போயிருக்காங்க அதான் தமிழனைக் கண்டதும் ரவுண்டு கட்டிட்டானுங்க..ஏற்கனவே அவுங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு வேற விடுவானுகளா.அதான் சுத்து போட்டுட்டானுங்க''
''ஐய்யய்யோ..ப்ச்
''அட ஏ அம்மணி ..தமிழன் அடி வாங்குறானேன்னு ஆதங்கப்படுறோம்..அடி வாங்குகிறவன் வாங்கின அடியைக்கூட ஐயப்பன் கொடுத்ததா பெருமைப் பட்டுக்கிட்டு ஊரு வந்து சேர்ரான்''
''சரி மாமா அதுக்காக மாலை போட்டுட்டு சபரி மலைக்கு போகவேண்டாம்ன்னு சொல்றீங்களா..நீங்க வேணாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களா இருக்கலாம்..எல்லாரும் உங்கள மாதியே இருக்கனுமா என்ன''
''நான் அப்படி சொல்லுல புள்ள.. சாமி கும்பிடறவனா கும்பிடாதவனாங்கிறது இப்ப முக்கியமில்ல..தமிழனா மலையாளியாங்கிறதுதான் இப்ப பிரச்சனையே..இங்க நாம மலையாளியை ஒண்ணும் பண்ணலை..ஆனா மாலை போட்டுகிட்டு மலைக்கு போன தமிழனை ''பட்டி''ன்னு திட்டி பல்லை ஒடைக்குறான்..இதுக்கு என்ன பதில சொல்லுவே..ஐயப்ப சாமிங்க அங்க அடி வாங்குறாங்கன்னு தெரிஞ்ச உடனே நாட்டுல இருக்குற பக்திமான்களோ மாலை போட்ட மத்த சாமிமார்களோ..குரல் கொடுக்கல..முற்போக்கு சிந்தனை இருக்குற கொஞ்ச நஞ்ச பேருதான் மலையாளிக்கு எதிரா மொதல்ல குரல் கொடுத்தாங்க அதுக்கப்புறம்தான் இந்துமத தலைவர்கள் அறிக்கை விட்டாங்க அதை நீ தெரிஞ்சிக்க ..நீ மாலை போட்டா என்ன போடலைன்னா என்ன.. தமிழன் மலையாளிகிட்ட அடி வாங்கக்கூடாது..அங்க போனாதானே அடிக்கிறான்..அங்க ஏன் போற அதுதான் என்னோட கேள்வி''
''என்ன மாமா வருசா வருசம் மாலை போட்டுட்டு இந்த வருசம் போடக்கூடாதுன்னா எப்படி''
''ஆமா புள்ள இத்தனை வருசமா மாலைய போட்டுட்டு ஐயப்பன் கோயிலுக்கு போயி கோடி கோடியா கொட்டிட்டு வந்ததாலதான் கொலுப்பு ஏறிப்போன மலையாளி தமிழன்னாலே தலையில தட்டுறான்''
''மலைக்கு போகாம இருந்தா அப்புறம் எப்படி மாமா ஐயப்பன் அருள் பாலிப்பாரு''
''அப்படியா..மாலை போட்டுட்டு போனா மலைமேல மலையாளிங்க அருள் பாலிக்கறாங்களே பரவாயில்லையா''
''விடுங்க மாமா ஐயப்பன் பழிக்கு பழி வாங்குவாரு''
''அவரென்ன அருக்காணி பையன் ஐயப்பன்னு நெனச்சுகிட்டியா அடுத்த ஊருக்காரன் அவன் பையனை அடிச்சுட்டான்னு அந்த ஊருக்கே போயி அவனை நாலு அப்பு அப்பிட்டு வர்றத்துக்கு அட ஏன் புள்ள நீ வேற''
''இப்ப என்ன மாமா சொல்றீங்க..மாலை போடுறது மூடநம்பிக்கை போடதீங்கன்னு சொல்றீங்களா''
''மூடநம்பிக்கையா இல்லையாங்கிறது அவுங்கவுங்க முடிவெடுக்கிறது..மாலை போடுன்னு சொல்றதுக்கோ வேண்டான்னு சொல்றதுக்ககோ யாருக்கும் உரிமையில்ல..சுயமரியாதை முக்கியம் மனுசனுக்கு. அதுவும் தமிழனுக்கு சுயமரியாதை அதிகம்ன்னு உலகத்துக்கே தெரியும். அதைக் கொண்டுபோயி கேரளாவுல போட்டுட்டு வந்திடலாம்ன்னு
சொல்றீயா''
''சரி மாமா என்னதான் வழி ..நீங்க முடிவா என்ன சொல்ல வர்றீங்க''

''ஏ மாமா ஆறுபடை முருகனுக்கும் மாலை போடறாங்களே''
''ஆமா தொண்ணூரு பேரு அங்க போங்க பத்து பேரு இங்க வாங்க..அட் ஏ அம்மணி கிராமத்தில இருக்குற பத்துபேருதான் முருகனுக்கு மாலைய போட்டுகிட்டு பஞ்சாமிர்தத்தை எதிர்பாக்குறான் ..மீதி பேரு ஐயப்பன் கோயில் அப்பத்துக்குத் தானே ஆசைப்படுறான்.கேரளா டூரு போறேன்னு சொன்னா எந்த பொண்டாட்டியாவது ஒத்துக்குமா..அதே சபரிமலைக்கு போறேங்கற பேர்ல மாலைய மாட்டிக்கிட்டு அப்படியே கேரளாவை சுத்தி பாத்துட்டு வர்றதுதானே அம்மணி''.
''சரிங் மாமா மாலை போட்டுட்டு மலைக்கு போலாம்ன்னு காத்திருக்காங்களே அவுங்களுக்கு என்ன சொல்றீங்க''
''ஐயப்பன எல்லாத்தையும் பாத்துக்குவான்னு தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் ஐயப்ப பக்தர்களே..அரசு பாதுகாப்பை பலப்படுத்தியதற்கு பிறகு பயணம் செய்யுங்கள் இல்லையேல் பட்டி என்று திட்டி பல்லை உடைக்கிறானாம் மலையாளி''
என்று சின்ராசு சொல்ல,
''இருங்க மாமா எங்க அக்கா வூட்டுக்காரரு நாளைக்கே மலைக்கு போறேன்னு
ஒத்த கால்ல நிக்கிறாரு நான் போயி விசயத்தை சொல்லிபோட்டு வந்துடுறேன்''
என்று சொன்ன அம்மணி தன் அக்கா வீட்டை நோக்கி ஓடினாள்..
------------------------------------------------------------
இனிய காலை வணக்கம் நண்பரே
ReplyDeleteமிக அருமையான பகிர்வு சிறப்பாக இருக்கு
காலை வணக்கம் தோழர்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ReplyDeleteசரியா சொன்னீங்க .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
கைய கொடுங்க பாஸ்...ஈரோட்டு பாசை கலக்கியிருக்கிங்க...சொன்ன விசயம் நூற்றுக்கு நூறு சரி....பழனிக்கு மாலை போடலாம் சரிதான் அப்பத்தான் அடங்குவானுக முதல்ல தமிழன் மலையாளி கடையில டீ குடிக்கிறதை நிறுத்தனும் மலையாளம் தெரிஞ்சவங்களுக்குத்தான் தெரியும் நம்மளை எவ்வளவு கேவலமா பேசுறானுகங்கறது பட்டி, பாண்டி, கருப்பன் இதெல்லாம் மலையாளி தமிழனுக்கு வைத்த பெயர்கள்
ReplyDeleteஆமாம் சுரேஸ் நீங்க சொன்னமாதிரி மலையாளி கடையில டீ குடிக்கிறத நிறுத்தனும்..ஆனா நம்ம ஆட்கள் அவங்கிட்ட பாக்கி வச்சு பழகிட்டாங்க..என்ன பண்றது?
ReplyDeleteகர்நாடகவில் அடிக்கிறான் - மகாராஸ்ட்ராவில் அடிக்கிறான் இப்ப கேரளாவில் அடிக்கிறான், தமிழ்நாட்டில் அடிக்க வேண்டாம் ஒருமித்த குரல் கொடுத்தாலே போதுமே, தமிழ்நாட்டில் உள்ள தமிழனுக்கு சொரனையே வரதா?
ReplyDeleteஏனுங்க நா சொல்றது சரிங்களா
இன்றுதான் தங்கள் வலைவழி
ReplyDeleteவந்தேன்
ஒன்றுதான் படித்தேன் அதுவும்
படி(தேன்)
நன்றுதான் நவின்றேன் நானும்
இங்கே
என்றுமே வருவேன் என்றே
இயம்பினேன் நன்றி!
த ம ஓ 3
புலவர் சா இராமாநுசம்
உண்மையில் மிகப்பெரிய விடயத்தினை நாசுக்காகச் சொன்னவிதம் அழகு ரசிக்க முடிந்தது சிந்திக்க வைக்கும் பதிவு அனைவரும் உணர வேண்டும்
ReplyDeleteநன்றி தோழரே பாராட்டுகளும் வாழ்த்துகளும்
/மனசாட்சி/
ReplyDeleteஆமாங்ன்னா சரிதானுங்க..
/புலவர் சா.இராமாநுசம்/
ReplyDeleteஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..தாங்கள் கருத்து சொன்னவிதம் என்னை உண்மையில் உற்சாகப்படுத்துகிறது..
/நேசமுடன் ஹாசிம்/
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
பட்டி என்று சொல்லி மலையாளி பல்லை உடைத்தால் தமிழனின் வீரம் எங்கே போனது? மாலை போட்டு விட்டதால் அமைதியாகி விட்டார்களா? சரி, போகட்டும்... சபரி மலைக்குப் போனால்தான் ஐயப்பனும், திருப்பதிக்குப் போனால்தான் சீனிவாசனும் அருள்வார்களா? வீட்டிருந்தே கும்பிட்டால் அருள மாட்டார்களா என்ன... எனில், அந்த அருள் எனக்கு வேண்டாம். நல்லா எழுதிருக்கீங்க... வாழ்த்துக்கள்!
ReplyDeleteமாப்ள மறந்துட்டாங்க போல...சுளுக்கு எடுக்கணும் இவனுங்களுக்கு!
ReplyDeleteஎங்கு இருந்து வணங்கினாலும் உண்மையான பக்தனுக்கு அவன் அருள் கிட்டும் என்பதில் ஐயம் இல்லை என்பதை வலியுறுத்திய அருமையான படைப்பு .வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ,
ReplyDelete//அரசு பாதுகாப்பை பலப்படுத்தியதற்கு பிறகு பயணம் செய்யுங்கள்//
ReplyDeleteநல்ல அறிவுரை.
த.ம.9
தலைப்பு மிக அருமை.
ReplyDeleteநன்றி
ReplyDelete/விக்கியுலகம் அவர்கள்/
/அம்பாளடியாள் அவர்கள்/
/சென்னை பித்தன் அவர்கள்/
மற்றும் வேங்கட சுப்ரமணியன் அவர்கள்/
அருமை
ReplyDeleteஇன்று
விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
அன்பு நண்பரே,
ReplyDeleteதங்கள் தளத்துக்கு என் முதல் வருகை..
வந்த உடனேயே சூடான பதிவொன்றைப் பார்த்தேன்..
சபரி மலைக்கு அதிகமாக பக்தர்கள் செல்வதே தமிழ்நாட்டிலிருந்துதான்..
வாங்குவதெல்லாம் வாங்கிவிட்டு "பாண்டினாட்டான்" பட்டி என்றெல்லாம்
திட்டி தீர்க்க வேறு செய்வார்கள்..
மரியாதை கொடுத்து வாங்கும் இடங்களுக்கு நாம் செல்லவேண்டும்..
அருமையாக அலசிப்பார்த்து ஒரு பதிவை பதிவேற்றியமை
நன்றாக உள்ளது நண்பரே..
வாழ்த்துக்கள்..
வருகைக்கு நன்றி
ReplyDelete/ம்கேந்திரன்/
/ராஜபாட்டை/
வீட்ல இருந்தாக்கூட சாமி எங்க மனசிலன்னு புரிய வைக்கப் பாக்கிறீங்க.புரிஞ்சுக்குவாங்களா.எல்லாம் வியாபாரம்.அதில கடவுளும் அடக்கம்.முதல்ல அடுத்தவங்களுக்கு உதவி செய்தா கடவுள் நாங்களாகவே இருப்போம் !
ReplyDeleteநல்ல பதிவு ..தமிழன் என்றாலே மலையாளிகளுக்கு இளக்காரம் ..
ReplyDeleteநன்றி..
ReplyDelete/ஹேமா/கோவை நேரம்/
காலத்திற்கு ஏற்ற கருத்துப் பதிவு அன்பரே............
ReplyDeleteஆனால் இந்த பாண்டி பட்டி ரொம்பா நாளா நடந்து கிட்டுத்தான் இருக்காமே??
நல்ல பதிவு அருமை....
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDelete/ராஜகோபாலன்/மதி/
சாமியே...சரணம் ஐயப்பா.
ReplyDelete//பத்துபேருதான் முருகனுக்கு மாலைய போட்டுகிட்டு பஞ்சாமிர்தத்தை எதிர்பாக்குறான் ..மீதி பேரு ஐயப்பன் கோயில் அப்பத்துக்குத் தானே ஆசைப்படுறான்.//
ReplyDeleteமது,
ஆக்கம் முழுதுமே சிறப்பாக இருக்கிறது.
மேலே குறிப்பிட்டிருக்கும் நையாண்டி வெகுவாக ரசிக்க வைக்கிறது.
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
ReplyDelete/சி.பி/சத்ரியன்/
////அட புள்ள முல்லப் பெரியாரு அணைப் பிரச்சனையே இன்னும் சூடு அடங்கல..மலயாளியும் தமிழனும் கட்டி பொரளாத கொறைதான்..ஏற்கனவே கன்னடத்துக்காரனுக்கும் சரி மலையாளிக்கும் சரி தமிழன்னு சொன்னாவே எளக்காரம்.////
ReplyDeleteஆமாங்க பலரும் அப்படித் தானே நினைக்கிறாங்கள்...
எம்மிடம் வரலாறு மட்டுமே உள்ளது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்
தலைப்பும் , உரையாடல் நடையும் , எடுத்துக் கொண்ட கருவும்
ReplyDeleteவெகு அருமை. அருமை. அற்புதம்.
வயித்தைக் கொஞ்சம் காயப்போட்டு
[முக்கியமாக புலால் உண்ணாமல்] வெற்று மணலில் ,
வெற்றுக் காலில் நடந்து , இயற்கையோடு இணைந்து
புலன் அடக்கி வாழ்ந்தால் ஆரோக்கியம் என்ற விரத நோக்கம்
அறிந்து , இங்கேயே அதை நன்றாக செயல் படுத்தலாம்.
உண்மை. உணர்வார்களா ? தேவை மனமாற்றம்.
நீங்கள் சொல்வது உண்மை..ஆனால் அதை செய்ய மறுக்கிறார்கள்..என்ன செய்வது..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..
ReplyDeleteஅன்பின் மதுமதி - வழக்கம் போல கலக்கல் சிந்தனை - சின்ராசுவும் அம்மணியும் நாட்டு நடப்ப அலசரது சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete